மரு.ராஜா ஏகாம்பரம்,
M.B.B.S,D.CH,
குழந்தைகள் நல மருத்துவர், பொள்ளாச்சி.
”
அகோர பசி
எதை பார்த்தாலும் சாப்பிட தோணுது , வயிறு நிறைய சாப்பிட்ட பின்னாடியும் , வயித்துல இடம் இல்லாத நேரத்துலயும் எதை பார்த்தாலும் ஏன் சாப்பிடறோம் னா , நமக்கு ஏற்படும் லெப்டின் ரெசிஸ்டன்ஸ் தான் காரணம் ,இது மாவு சத்து அதிகம் சாப்பிட்டு இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஏற்பட்டவுடன் நமக்கு வருகிறது.
நமக்கு ஒரு சிலருக்கு சாக்லேட் கிரேவிங் ,ஒரு சிலருக்கு பிரட் ,ஒரு சிலருக்கு பிரன்ச் பிரைஸ் ,சிலர் எனக்கு முருக்கு,மிக்ஸர் இருந்தா போதும் ஸ்வீட் கூட வேண்டாம்னு சொல்லுறோம் ,ஏன் ?
இதுக்கு நம்ம உடம்பில உள்ள எதாவது குறைபாடு காரணமா ? விரிவாக பார்கலாம் .
1.நமக்கு சாக்லேட் சாப்பிட கிரேவிங் வந்தால் ,மேக்னிசியம் குறைபாடு உள்ளது என்று அர்த்தம் , பாதாம், வால்நட் சாப்பிட்டால் இது குறையும் .
2.சக்கரை அதிகம் உள்ள பொருள்கள் சாப்பிட தோன்றினால் அது உடலில் , குரோமியம், கார்பன், பாஸ்பரஸ், சல்பர்,டிரிப்டோபன் குறைபாடு உள்ளது என்று அர்த்தம் , உணவில் சீஸ், சிக்கன்,புரக்கோலி சாப்பிட்டால் இனிப்பு உணவுகள் கிரேவிங்ஸ் குறையும்.
3.மாவுசத்து அதிகம் உள்ள பிரட், பாஸ்த்தா உண்ண கிரேவிங் இருந்தால், நைட்ரஜன் குறைபாடு இருக்க வாய்ப்பு உள்ளது , அவர்கள் புரத சத்து நிறம்பிய மாமிசம் சாப்பிடுவது இதை குறைக்கும்.
4.கொழுப்பு உள்ள எண்ணெய் பொருள்கள் மேல் கிரேவிங் இருந்தால் ,கால்சியம் குறைபாடு இருக்க வாய்ப்பு உள்ளது ,இவர்கள் சீஸ் ,புரக்கோலி,கீரை வகைகள் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது .
5.எனக்கு இனிப்பு புடிக்காது ,காரம் தான் புடிக்கும்னு சொல்லுரவங்களுக்கு குளோரைட் ,சிலிகான் குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உள்ளது ,இவர்கள் மீன் ,பாதாம் ,வால்நட் உணவில் சேர்த்து கொண்டால் நல்லது .
உடலில் லெப்டின் ரெஸிஸ்டன்ஸ் குறையும் போது , புட் கிரேவிங் குறையும் .
பேலியோ உணவு முறையில் நம்முடைய லட்சியம் ,நம்முடைய இரத்த பரிசோதனையில் உள்ள அனைத்து குறைபாடுகளும் சரியாக வேண்டும் , எடை குறைவது மட்டும் நம்முடைய குறிக்கோள் இல்லை . சப்பிளிமென்ட்ஸ் தேவைப்பட்டால் ஆரம்ப கட்ட உணவு முறையில் அதை சேர்த்து ,பற்றாக்குறை சரியான பிறகு உணவின் மூலம் நமக்கு தேவையான வைட்டமின்கள்,தாதுப்பொருட்கள் கிடைக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து சத்துக்களும் நிறைந்த பேலன்ஸ்டு உணவு முறைக்கு இந்த அவசர யுகத்தில் வாய்ப்பு குறைவாக உள்ளது ..
தொடரும்…
#cheating4
Link to part 1
https://m.facebook.com/story.php?story_fbid=1879257685467494&id=100001498420916
Link to part 2
https://m.facebook.com/story.php?story_fbid=1879610832098846&id=100001498420916
Link to part 3
https://m.facebook.com/story.php?story_fbid=1880408768685719&id=100001498420916