preloader

2009-2019 வருட சவால்,டாக்டர் .ராஜா ஏகாம்பரம்

  • Home
  • -
  • Health Tips
  • -
  • 2009-2019 வருட சவால்,டாக்டர் .ராஜா ஏகாம்பரம்
 2009-2019 வருட சவால்,டாக்டர் .ராஜா ஏகாம்பரம்

(2019-2019 )10 வருட சேலஞ்.

டாக்டர் .ராஜா ஏகாம்பரம்,
குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர்,
மிஸஸ் மருத்துவமனை,
பொள்ளாச்சி.

தற்போது முகநூல் முழுவதும் 10 வருட சேலஞ்ச் போட்டோக்களில் நிறைந்துள்ளது. சிலர் உடல் நிலையை நல்ல நிலையில் வைத்திருக்கிறார்கள், சிலர் மோசமடைந்து இருக்கிறார்கள். நம்முடைய பேலியோ முறையாக பாலோ செய்யும் நண்பர்களிடம் அனைவரும் கேட்கும் கேள்வி ?எதற்காக டயட் இருக்கீங்க, உடற்பயிற்சி செய்கிறீர்கள்? ஜாலியா என்ஜாய் பண்ணுங்க -நல்லா சாப்பிடுங்க, சந்தோஷமாயிருங்கன்னு சொல்லுறாங்க. யாரெல்லாம் பேலியோ முறையாக பண்றாங்கன்னு பார்த்தால் தங்களுக்கு ஏற்பட்ட உடல் வியாதிகள் நல்ல நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்கள் மட்டும்தான்.

இரண்டு நாளைக்கு முன்னாடி என்னுடைய நெருங்கிய நண்பர் என்னை பார்க்க கிளினிக்கு வந்திருந்தார்.முகத்தில் கவலையாக இருப்பது தெரிந்தது. அவர் சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய சகோதரியை பேலியோ உணவுமுறை ஆரம்பிக்கலாமா என்று கேட்பதற்காக ரத்தப்பரிசோதனை செய்து அழைத்து வந்திருந்தார்.அவரும் அவருடைய சகோதரரும் முறையாக பேலியோ ஃபாலோ செய்து நல்ல உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்கள். அவருடைய ரத்த பரிசோதனையில் பிரச்சனை இருந்ததால் சிறுநீரக மருத்துவரிடம் காண்பிக்க அறிவுரை செய்து அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகு அவருடைய சகோதரி என்னை பார்க்க வரவில்லை. அவருடைய சகோதரர் கூறிய அறிவுரைகளையும் அவர் கடைபிடிக்கவில்லை. சிறுநீரக மருத்துவர் கூறிய ஆலோசனைக்கு பிறகு நாட்டு மருந்து கடந்த சில ஆண்டுகளாக சாப்பிட்டு வந்துள்ளார்.

தற்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்து விட்டதாகவும், அவருடைய ரத்த கிரியாட்டினின் அளவுகள் 6-க்கு மேலிருந்தால் டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும், ஆனால் அவருக்கு தற்போது ஒரு முறை டயாலிசிஸ் செய்த பிறகும் 14 ஆக உள்ளது. தற்போது வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு சென்று உள்ளார்.சிறிது காலம் கழித்து மாற்று சிறுநீரகம் கிடைத்தால் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு பதிவேட்டில் பதிவு செய்துள்ளார்.

தற்போது மூளை சாவு ஏற்பட்டவர்கள் தங்களுடைய உறுப்புகளை தானமாக கொடுக்கும்போது இவருக்கு மாற்று சிறுநீரகம் சீனியாரிட்டி அடிப்படையில் கிடைக்க வாய்ப்புள்ளது. இவருடைய சீனியாரிட்டி 165. இவருக்கு முன் 164 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வெயிட்டிங் லிஸ்டில் உள்ளனர். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சிறுநீரகம் தானம் அளிக்க இவருடைய ரத்த உறவினர்கள் யாரும் இல்லை. ரத்த உறவினர்கள் இல்லாதவர்களிடம் சிறுநீரகம் தானம் பெற்று அறுவை சிகிச்சை செய்வது தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. சில வெளிநாடுகளில் இதற்கு முன்னர் இவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வந்தது, அது குறித்து விவரம் கேட்க என்னை பார்க்க வந்தார்கள். தற்போது அவ்வாறு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை எந்த நாட்டிலும் செய்யப்படுவதில்லை என்று கூறினேன்.

சர்க்கரை நோய் கட்டுப்பாடு இல்லாவிட்டால் தலை முதல் கால் வரை நம்முடைய உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளையும் செயலிழக்க செய்யும் மோசமான ஒரு வியாதி.
1. கண்பார்வை இழப்பு(Diabetic retinopathy-may need laser treatment )
2. ஹார்ட் அட்டாக்(Myocardial infarction- may need stent or bypass surgery)
3. ஸ்ட்ரோக் எனும் பக்கவாதம்(stroke with or without loss of speech)
4. சிறுநீரக செயலிழப்பு(Diabetic nephropathy leading onto renal failure)
5. ஆறாத புண்களால் கால் விரல்கள் அல்லது காலை அகற்றும் கட்டாயம்.(Diabetic foot and ulcers demanding amputations of toes ,legs)

மேற்கூறிய அபாயங்கள் சர்க்கரை நோயினால் ஏற்படாமலிருக்க, நாம் செய்ய வேண்டியது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைப்பது(we can only keep diabetes under control,we cannot cure diabetes). சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் உடலில் சுரக்காமல் இருப்பது (டைப்1 சக்கரை நோய்) இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் இல்லாமல் உயிர் வாழ முடியாது, இவர்கள் உணவுக்கட்டுப்பாடு உடற்பயிற்சி செய்தாலும் இன்சுலின் அளவை குறைக்க முடியுமே தவிர நிறுத்த முடியாது. டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தும் வேலை செய்யாமல் இருக்கும். இவர்கள் பேலியோ உணவு முறை, மற்றும் முறையான உடற்பயிற்சி மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் அல்லது இன்சுலின் ஊசி தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்து சர்க்கரை நோயினால் வரக்கூடிய ஆபத்துகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும், அல்லது வரக்கூடிய ஆபத்துகளை தள்ளிப்போட முடியும்.

உதாரணத்திற்கு நம்முடைய குழுவில் உள்ள சென்னையைச் சேர்ந்த திரு கண்ணன் ( Rtn Kannan zhagirisamy) அவர்களுடைய 10 வருட சேலஞ்ச் போட்டோவை பாருங்கள் இவர் தன்னுடைய உடல் பருமனை குறைத்து, சர்க்கரையைநோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஒரு பத்து வருடம் குறைந்தது போல இளமையாக சுறுசுறுப்பாக உள்ளார். தான் பெற்ற பலன்களை ரோட்டரி கிளப்பின் மூலமும் மற்றும் நம்முடைய இலவச ஆலோசனை வழங்கும் முகநூல் குழுமம் (ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு) மூலமும் பலருக்கு அறிவுரைகள் கூறி வருகிறார். இவரைப்போல பல்லாயிரக்கணக்கானவர்கள் பயனடைந்துள்ளார்கள். இது அனைவராலும் செய்ய முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. பலர் துரித உணவின் மேல் உள்ள சபலத்தினாலும் மனக்கட்டுப்பாடு இல்லாததாலும் தங்களுடைய உடல் பருமன், சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தத்தை ,ரத்தக் கொழுப்பு அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் தனக்குள்ள நோய்களை அதிகப்படுத்தி வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுகிறார்கள்.

பிறக்க இருக்கும் புதுவருடத்தில்(2020 AD) அனைவரும் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத நல்ல உணவு முறை , உடற்பயிற்சி(30-60 minutes exercise ,which is possible for your age), நல்ல உறக்கம்(minimum 7-8 hours sleep), டென்சனை(mental stress) குறைத்து, நம்முடைய நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அதிக நேரத்தை செலவழித்து(Quality time with family and friends ) உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *