மரு.ராஜா ஏகாம்பரம், குழந்தைகள் நல மருத்துவர், பொள்ளாச்சி
ஆராய்ச்சியாளர்கள் சக்கரை நோய் இரண்டாம் வகை வருவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளவர்களிடம் சோதனை மேற்கொண்டனர், அவர்களை சாதாரண உணவு எடுத்து கொண்டு உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள் என்று அனைவரிடமும் என்ன மாறுதல் உள்ளது என்று சோதனை நடைப்பெற்றது.
மினிசோட்டாவில் உள்ள பெத்தேல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் 30 பெண்களையும், 18 -65 வயது ஆண்களையும் பரிசோதனை செய்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனையில்மெட்டபாலிக் சின்ட்ரோம், சக்கரை நோய் இரண்டாவது வகை , சக்கரை நோய் வருவதற்கான அறிகுறிகள் உள்ளவர்கள்.
மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது அதிக இரத்த அழுத்தம், அதிக இரத்த சக்கரை அளவுகள், இடுப்பை சுற்றி அதிக கொழுப்பு, இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவுகள் அனைத்தும் சேர்ந்த ஒரு நிலை.
இந்த பரிசோதனையில் BMI 25 சதவிகிதத்துக்கு மேலும், இடுப்பு சுற்றளவு ஆண்களுக்கு 37 இஞ்ச்க்கு மேலும், பெண்களுக்கு 31.5 இஞ்ச்க்கு மேலும் இருந்தவர்கள் சேர்த்து கொள்ளப்பட்டணர்.
அவர்களை மூன்று அணிகளாக பிரித்து பரிசோதனை செய்தனர்.
முதல் 10 வாரம் முதல் அணி 30 கிராமுக்குள்ளாக மாவு சத்து உள்ள உணவு எடுத்து கொண்டு உடற்பயிற்சி செய்யவில்லை.
இரண்டாவது அணி சாதாரண மாவுசத்து அதிக உணவு உடற்பயிற்சி செய்யவில்லை.
மூன்றாவது அணி சாதாரண மாவு சத்து அதிக உணவு ,ஆனால் வாரத்துக்கு 3-5 நாட்கள் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தனர்.
10 வாரத்துக்கு பிறகு பரிசோதனை செய்து பார்த்த போது உடற்பயிற்சி பல நன்மைகள் கண்டறியப்பட்டது.
பேலியோ உணவு முறையில் 30-40 கிராமுக்குள்ளாக உணவு எடுத்து கொண்ட அணியின் அனைத்து பரிசோதனை முடிவுகளும் மத்த இரண்டு அணிகளை விட சிறப்பாக இருந்தது.
இந்த பரிசோதனை முடிவுகள் சக்கரை நோய் மற்றும் மெட்டபாலிக் சின்ட்ரோம் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நம்முடைய குழுவில் சொல்வது போல 40 கிராமுக்குள்ளாக மாவுசத்து உணவுடன் ,உடற்பயிற்சியும் செய்தால் மெட்டபாலிக் சின்ட்ரோம் குறைந்து ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும்.
http://www.dailymail.co.uk/health/article-5175959/Keto-diet-burns-ten-times-fat-standard-diet.html