preloader

மனஅழுத்த நோயால்,நீரழிவு நோய் அதிகமாகும் நீரழிவுநோயால் மனஅழுத்த நோய் அதிகமாகும்.

  • Home
  • -
  • Health Tips
  • -
  • மனஅழுத்த நோயால்,நீரழிவு நோய் அதிகமாகும் நீரழிவுநோயால் மனஅழுத்த நோய் அதிகமாகும்.
 மனஅழுத்த நோயால்,நீரழிவு நோய் அதிகமாகும் நீரழிவுநோயால் மனஅழுத்த நோய் அதிகமாகும்.

மனஅழுத்த நோயால்,நீரழிவு நோய் அதிகமாகும்
நீரழிவுநோயால் மனஅழுத்த நோய் அதிகமாகும்.

 

கொரோனாகாலத்தில் இந்த இரு நோய்களும்
அதிகமாகும்.

என்னிடம் மனநல சிகிச்சை பெறும் மன அழுத்த நோயாளிகள்,பலருக்கு நீரழிவு நோயாலும்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் அன்றாட வாழ்க்கை
பாதிப்புக்குள்ளானதால், அவர்களால் உடற்பயிற்சி
செய்ய இயலவில்லை,,
அதனால் அவர்களது நீரழிவு நோய் அதிகரிக்க,
அதனால் அவர்கள் மனநோயும் அதிகரித்துள்ளது!
அதனால் அவர்களுக்கு தற்கொலை எண்ணம்!

அதற்குரிய மனநல ஆலோசனைகள்.

1.உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம்

2.உடற்பயிற்சி வீட்டிலேயே செய்வதும் அவசியம்

3.டிவி,செல்போன்களை முறையாக கையாளுதல்

4.அளவான தூக்கம் 7 -8 மணி நேரம்

5.இரவு சீக்கிரமாக தூங்குதல் மிக அவசியம்.
(மூளை,கணையம்,ஈரல்,இதயம் போன்ற முக்கிய
உள்ளுறுப்புக்களுக்கு இரவு ஓய்வு தேவை)

6.தியானம்,யோகா,மூச்சுப்பயிற்சி முறையாக
செய்தால் உடலும்,உள்ளமும் நலமடையும்.

7.ஊரடங்கால் வீட்டிலேயே இருப்பதால் உறவுகள்
மத்தியில் சண்டைகள் அதிகமாகும்.

8.கருத்துவேறுபாடுகளைக் குறைக்க,மெளனமே
சிறந்த வழியாகும்.

9.கொரோனா பாதிப்பு பற்றிய டிவி செய்திகளை
பார்க்காமல் இருப்பது மிக நல்லது.

10.வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளிடம் நேரத்தை
பயனுள்ளதாக கழிப்பது குடும்பத்திற்கே நல்லது.

11.காலையும்,இரவும் இறைவழிபாடு செய்வதால்
மனம் அமைதியடையும்,,
மனஅமைதியால்,நல்ல தூக்கம் வரும்.

12.நோய்களுக்குரிய மாத்திரைகளை சரியான
நேரத்தில்,சரியான அளவு சாப்பிடவேண்டும்.

(நீங்களாக மாத்திரையை குறைப்பது,கூட்டுவது,
நீங்களாகவே கடைகளில் மாத்திரைகள் வாங்கி
சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.)

Credit :Dr. Vijaya Rengan
Psychiatrist.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *