2009-2019 போட்டோ சேலஞ்
மரு.ராஜா ஏகாம்பரம்,D.C.H,
குழந்தைகள் நல மருத்துவர்,
மிஸஸ் மருத்துவமனை,
பொள்ளாச்சி.
கொஞ்ச நாளாவே பேஸ்புக்ல 2009-2019 போட்டோ சேலஞ் போட்டோக்கள் நிறைய போஸ்ட் பண்ணி இருந்தாங்க , இந்த 10 வருஷ சேலஞ் போட்டோ பாருங்க .நிறைய பேர் அளவுக்கு அதிகமா மாவுச்சத்து அதிகம் திண்பன்டங்கள் ,இனிப்புகள் பத்து வருஷமா சாப்பிட்டு இப்ப இன்சுலின் போட வேண்டிய நிலமையில இருக்காங்க .30 வருஷத்துக்கு முன்னாடி ரோட்டுக்கு ஒருத்தருக்கு இருந்த சக்கரை வியாதி இன்னைக்கு வீட்டுக்கு ஒருத்தருக்கு இருக்கு .
நாலு பேரு நின்னு பேசிகட்டு இருந்தா அதுல ஒருத்தருக்கு சக்கரை வியாதி இருக்கு.
இன்னொரு போஸ்ட் பார்த்தேன் இன்சுலின் ஊசியின் விலை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது என்று .
இந்த ரெண்டு போஸ்ட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா ?? ஆமாம் தொடர்பு இருக்கிறது .
ஒரு பொருளுக்கு டிமாண்ட் அதிகமாக இருந்தால் அதோட விலை வியாபாரிகள் அதிகமாக வைக்கிறார்கள்.
சக்கரை நோயில் இரண்டு வகை உள்ளது. சிறு வயது முதல் சக்கரை உள்ளவர்களுக்கு டைப் 1 மற்றும் வயது ஆன பிறகு வருவது டைப் 2 சக்கரை நோய் .டைப் 1 சக்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் வாழ் நாள் முழுவதும் இன்சுலின் ஊசி மட்டும் தான் போட முடியும் ,இவர்கள் மாத்திரை சாப்பிட முடியாது .டைப் 2 சக்கரை நோய் உள்ளவர்கள் முதலில் உணவு கட்டுப்பாடு ,உடற்பயிற்சி மற்றும் சக்கரை கட்டுபடுத்தும் மாத்திரைகள் மூலம் தங்களுடைய சக்கரை அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்கிறார்கள் .சிறிது காலங்ஙளுக்கு பிறகு உணவு கட்டுபாடு இல்லாமல் இருப்பது ,உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ,மாவுசத்து அதிகம் உள்ள தாணிய உணவுகள் ,திண்படங்கள் சாப்பிடுவதால் சக்கரை மாத்திரைகளின் தேவை அதிகமாகிறது .ஒரு கட்டத்தில் டைப் 1 நோயாளிகள் போல இன்சுலின் எடுத்தால் தான் சக்கரை கட்டுபாட்டில் வைக்க முடியும் என்ற நிலமைக்கு தள்ளப்படுகிறார்கள் .
இன்சுலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொணீடே இருக்கும். ஒரு நேரம் தேவைப்பட்ட இன்சுலின் மூன்று நேரமும் போட வேண்டி வரும் .
இவர்கள் இன்சுலின் போடாமல் ,சக்கரை அளவுகளை கட்டுபாட்டில் வைக்கவில்லை என்றால் சக்கரை நோயால் உடல் உறுப்புகள் பாதிக்கபடுவது அதிகரிக்கும் .
டையபடிக் ரெட்டினோபதி மூலம் பார்வை இழப்பு ஏற்படலாம் .டையபடிக் நெப்ரோபதி மூலம் சிறுநீரகம் பாதிப்பு அடைந்தால் ,டயாலிசிஸ் பின்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்.
இருதயம் பாதிப்பு அடைந்தால் மாரடைப்பு ஏற்படலாம் .மூலைக்கு செல்லும் இரத்த குழாய் பாதிப்பு அடைந்தால் பக்க பாதம் மற்றும் பேச முடியாமல் போகலாம் .டயாபடிக் நியூரோபதி மூலம் காலில் உணர்ச்சி குறைந்து புண் ஏற்பட்டால் ஆராமல் கால் விரல்கள் அல்லது கால் எடுக்க வேண்டிய நிலை வரலாம் .
சக்கரை நோயை உணவு கட்டுப்பாடு,உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் கட்டுபாட்டில் வைத்தால் சக்கரை நோயால் வரக்கூடிய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம் .
பேலியோ உணவு முறையில் நேரடியான இனிப்புகள் தவிர்த்து நாம் சாப்பிடும் குறைவான மாவுசத்து உணவுகள் ,சக்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கும் ,மாத்திரை கள் ,இன்சுலின் ஊசி தேவை குறையும் ,ஒரு சிலருக்கு மருத்துவர்கள் மாத்திரை ,இன்சுலின் நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது.
பேலியோ உணவு சக்கரை நோயை கட்டுபடுத்தி வைக்கும்,குணப்படுத்தாது .
பேலியோ உணவின் மூலம் சக்கரை கட்டுப்படுத்தி ,மாத்திரைகளை நிறுத்திவிட்டு அதிதமாக சீட்டிங் செய்வது ,மாவு சத்து அதிகம் உள்ள தானிய உணவுகளை அதிகம் எடுப்பது,உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மீண்டும் சக்கரை நோய்க்கு மாத்திரைகள் ,இன்சுலின் ஊசி எடுக்க வேண்டி வரும் .
பேலியோ உணவின் மூலம் சக்கரை நோயை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் பின்னாலில் வரும் உடல் உள் உருப்புகள் பாதிப்பு வராமல் தடுக்க முடியும் .
நாம் சக்கரை நோய் மருத்துவர்கள் சொல்வது போல முறையாக உணவு கட்டுப்பாடு ,உடற்பயிற்சி ,மாத்திரைகள் எடுக்காமல் தினமும் இன்சுலின் போடும் நிலைக்கு விரைவாக செல்கிறோம் ,பிறகும் கட்டுப்பாடு இல்லாமல் அதிக உடல் உள் உறுப்புகள் பாதிப்பு ஏற்படும் நிலைக்கு செல்கிறோம் .
உணவில் நாம் சாப்பிடும் மாவுசத்து உணவுகள்,இனிப்புகள் குறைத்து ,சாப்பிட்ட மாவுசத்தை உடற்பயிற்சி மூலம் எரித்தால் சக்கரை மாத்திரைகள் ,இன்சுலின் தேவை குறையலாம்.
இதை செய்யாமல் இன்சுலின் விலை நாளுக்கு நாள் ராக்கட் வேகத்தில் அதிகரித்து கொண்டே போகிறது என்றால் என்ன செய்ய முடியும்.
இந்திய அரசாங்கம் இன்சுலின் உயிர் காக்கும் மருந்து என்று அறிவித்து அதன் விலையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது .அரசு மருத்துவமனையில் சக்கரை மாத்திரைகள் ,இன்சுலின் ஊசி இலவசமாக வழங்கப்படுகிறது .
தனியார் மருத்துவமனைகளில் உள்ள மிகவும் சுத்தப்படுத்தப்பட்ட அனலாக் இன்சுலின் ,இன்சுலின் பென் கேட்ரிஜ் விலை அதிகமாக உள்ளது ,அந்த ஊசி மருந்துகளை வசதி உள்ளவர்கள் வாங்கி கொள்ளட்டும்.
Any life style disease can be controlled by a life style change ,but that change should be consistent, if we change the life style , the same disease will reappear.
பேலியோ மாற்று உணவு முறை ,மாற்று மருத்துவம் அல்ல.