
மருத்துவர். ராஜா ஏகாம்பரம்
மிஸஸ் மருத்துவமனை,
பொள்ளாச்சி.
இன்று கிளினிக்கில் பேலியோ உணவை என்னுடைய அறிவுரையின் பேரில் கடந்த இரண்டு வருடங்களாக கடைபிடித்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, உடல் எடையையும் குறைத்த ஒரு 65 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பதட்டத்தோடு கன்சல்டேஷனுக்கு வந்தார்.
அவர் நம்முடைய குழுவால் நடத்தப்படும் பேலியோ மீட்டிங் மற்றும் நம்முடைய குழுவில் போடப்படும் அனைத்து போஸ்டர்களையும் படித்து முறையாக பலியோ உணவு முறையை கடைபிடித்து வந்தார்.
அவரை முதல்முறையாக பார்த்தபோது நடக்கமுடியாமல் இருந்தவர் காளியோ முறையாக கடை படித்தபோது தன்னுடைய போடோ மீட்டர் கருவியின் அளவுடன் 10,000 அடிகள் தினமும் நடந்து கொண்டிருந்தார்.
தற்போது குறைந்த எடை மீண்டும் 10 கிலோ கூறிவிட்டதாகவும், மூன்று மாத சர்க்கரை அளவுகள் எட்டுக்கு மேல் சென்று விட்டதாகவும், டிரைகிளிசரைடு கொழுப்பு அளவுகள் கூடி விட்டதாகவும் பயந்துபோய் நான் அனைத்தும் சரியாகி தானே செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
அவருடைய பதட்டத்தை தனித்து விட்டு சரி இப்போது எப்படி உணவை சோலை செய்கிறீர்கள்? என்று கேட்டேன்.
கடந்த ஆறு மாதமாக புரோட்டின் தனக்கு குறைவாக இருப்பதாக தன்னுடைய சக்கரை மருத்துவர் கூறினார் என்று தினமும் இருவேளையும் புரோட்டின் பவுடர் பாலில் கலந்து குடித்து வந்துள்ளார். தினமும் ப்ரோட்டின் வேண்டுமென்று பன்னீர் அதிகமாக சாப்பிட்டு வந்துள்ளார். எடை கூட ஆரம்பித்தவுடன் நடக்க முடியாமல் போய் விட்டதால் 2000 ஸ்டெப்ஸ் நடப்பது சிரமமாக இருப்பதாக கூறினார்.
அவர் முறையாக பேலியோ உணவு முறை பாலோ பண்ணி வந்தபோது அவருடைய சக்கரை மருத்துவர் எப்படி உங்களுடைய உடல் எடையை குறைத்தீர்கள் ? எப்படி மூன்று மாத சர்க்கரை அளவை ஆறு கொண்டு வந்தீர்கள் என்று வியந்து அவரை பாராட்டினார் என்று அவரே கூறியுள்ளார்.
அவர் ஒரு பிராமின்,சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று என்னுடைய அறிவுரையின் பேரில் ஒரு வேளை தன்னுடைய உணவில் முட்டை சேர்த்துக் கொண்டார். காய்கறி, பட்டர் ,சீஸ் பாதாம் ,சேலட் என்று முறையாக பேலியோ உணவு முறை எடுத்து சர்க்கரை அளவை நல்ல அளவில் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.
வெளிநாட்டிலுள்ள அவருடைய மகளின் மூலம் பேலியோ பற்றி கேள்விப்பட்டு , நம்முடைய குடும்பத்தில் இணைந்து, முறையான அறிவுரையுடன் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
தற்போது புரோட்டின் வேண்டுமென்று முட்டையை நிறுத்திவிட்டு இரண்டு வேளையும் சர்க்கரை கலந்த புரோட்டீன் பவுடர் பாலில் கலந்து காலை ,மாலை இரு வேளையும் குடித்துக்கொண்டு காய்கறி மற்றும் சைவ உணவுக்கு மாறி சர்க்கரை அளவை அதிகப்படுத்தி எடையும் அதிகரித்து,கொழுப்பு அளவு அதிகரித்து இரண்டு வேளையும் 30 யூனிட் இன்சுலின் இரண்டு வேளையும் சர்க்கரை மாத்திரை,கொழுப்பு குறைக்கும் மாத்திரை சாப்பிட்டும் அவருடைய சர்க்கரை கொழுப்பு அளவுகள் கட்டுப்பாட்டில் இல்லை.
அவரை பழையபடி மீண்டும் காய்கறி, கீரை, முட்டை ,பட்டர் ,சீஸ் ,தேங்காய், அவகோடா, பிரக்கோலி ,பனீர் ,பாதாம் கலந்த உணவுகளை சாப்பிட்டு சர்க்கரை அளவை படிப்படியாக குறைத்து இன்சுலின் மாத்திரையை தேவைகளை அவருடைய மருத்துவரின் அறிவுரையின் படி குறைக்கும்படி கூறி அனுப்பி வைத்தேன்.
அவர் பல வருடங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு டைப் 2 சர்க்கரை நோயிலிருந்து டைப் 1 சர்க்கரை நோய்க்கு மாறி ,இன்சுலின் இல்லாமல் இருக்க முடியாத நிலையில் முறையாக பேலியோ பாலோ செய்து சர்க்கரையை மாத்திரைகளை நிறுத்தி குறைந்த அளவு இன்சுலின் ஊசியுடன் உடல்நிலையை மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
தற்ப்போது இன்சுலின், சர்க்கரை மாத்திரைகள் ,கொழுப்பு மாத்திரைகள் எடுத்துக்கொண்டப்பிறகும் சக்கரை கட்டுப்பாட்டில் இல்லாததற்கு காரணம் அவர் அதிகப்படியாக தன்னுடைய உணவில் சேர்த்துக் கொண்ட அதிகப்படியான மாவு சத்து உணவுகள்.
மாவுச்சத்து உணவுகள் நம்மை மேலும் மேலும் மாவுச்சத்தை சாப்பிடத் தூண்டும்.
பேலியோ உணவுமுறை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், குணப்படுத்தாது.