preloader

சிறிய வயதில் (20-30)ஏற்படும் மாரடைப்பை தடுப்பது எப்படி??

  • Home
  • -
  • Health Tips
  • -
  • சிறிய வயதில் (20-30)ஏற்படும் மாரடைப்பை தடுப்பது எப்படி??
 சிறிய வயதில் (20-30)ஏற்படும் மாரடைப்பை தடுப்பது எப்படி??

மருத்துவர். ராஜா ஏகாம்பரம்,
குழந்தைகள் நல மருத்துவர்,
மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி.

பத்து வருஷத்துக்கு முன்னாடி ஆண்களுக்கு 50 வயசுக்கு அப்புறம், பெண்களுக்கு 60 வயசுக்கு அப்புறம் வந்த மாரடைப்பு, இப்ப இருபது வயசு அல்லது முப்பது வயசு குள்ளேயே வருது, காரணம் என்ன ? அதை எப்படி தடுக்கிறது ?தடுக்க முடியுமா? இது பரம்பரையாக வருதா ?
நம்ம ஏதாவது செஞ்ச தப்பு தான் காரணமா?

இதற்கெல்லாம் முக்கியமான காரணம் நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றுனது தான்.
அதிகப்படியான டென்ஷன், தூக்கமின்மை, இப்ப செய்யும் பெரும்பாலான வேலைங்க சேரில் உட்கார்ந்து செய்யும்படி இருக்கு. பணம் சம்பாதிக்கனும் என்கிற வேகத்துல நம்மளோட உடம்ப நம்ம மறந்திடறோம்.
எல்லார் ரோட்டுலயும் பேக்கரி வந்துருச்சு, பேக்கரியில் சாப்பிடுறது நம்ம வீட்ல சாப்பிடுவதை விட நல்லது நாம நினைக்கிறோம்.
குழந்தைங்க கார்ட்டூன் பார்க்கிறது, மொபைல் வைத்து விளையாடுவது, கம்ப்யூட்டர்ல நேரம் கழிக்கறது அதிகமா இருக்கு.

பெற்றோர்களும் குழந்தைகள் முன்னாடி அதிக நேரம் டிவி பார்ப்பது, மொபைல் யூஸ் பண்ணுவது ,கம்ப்யூட்டர் யூஸ் பண்ணுவது அதிகரித்துள்ளது.

யாருக்கெல்லாம் அதிகமா மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது(High risk individuals for heart attack ):
1. ஆண்களுக்கு அவருடைய அப்பா அல்லது அவருடைய அண்ணன் அல்லது தம்பிக்கு 55 வயதுக்குள் மாரடைப்பு வந்து இருந்தால்.
2. பெண்களுக்கு 65 வயதுக்குள் மாரடைப்பு(Heart attack) அல்லது மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு (பக்க வாதம்-stroke ஏற்பட்டிருந்தால்)

மாரடைப்பு(Heart attack) ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்:

1. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இருதய பரிசோதனை (Routine cardiac check up )செய்து கொள்ள வேண்டும்
2. உயர் ரத்த அழுத்தம்(High B.P), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய்( In controlled Type 2 Diabetes), அதிக உடல் பருமன்(un healthy BMI), இடுப்பு சுற்றளவு அதிகமாக இருப்பது(Hip waist ratio ).
3. வருடம் ஒரு முறை நம்முடைய குடும்ப மருத்துவரிடம் உடல் நல பரிசோதனை (Routine annual health check up by family physician)

எப்படி மாரடைப்பு வருவதை தடுக்கலாம் அல்லது தள்ளிப் போடலாம்:

  • வாழ்க்கை முறை மாற்றம்-தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது
  • தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வது,
  • துரித உணவுகளை தவிர்ப்பது,
  • காய்கறி கீரைகளை அதிகமாக உண்பது, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது
  • ஆண்கள் சிகரெட் குடிக்காமல் மது அருந்தாமல் இருப்பது,
  • சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, மாவு சத்து உணவுகளை குறைத்து உண்பது , உடல் பருமனை குறைப்பது, ரத்த கொழுப்பு சத்து அளவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, தேவையான நல்ல புரதம்,
  • இருதயத்துக்கு கெடுதல் செய்யாத கொழுப்பு உணவுகள் உண்பது நல்லது .

“வருமுன் காப்போம்”- சிறுவயதில் ஏற்படும் உடல்பருமன் உடலில் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது உதாரணத்திற்கு சிறுவயதிலேயே ஏற்படும் டைப் 1 சர்க்கரை நோய், முறையற்ற மாதவிடாய் போன்றவை.

சிறுவயதில் அதிகப்படியாக ஏற்படும் மாரடைப்புக்கு சிறுவயதில் முறையற்ற உணவு முறையால் ஏற்படும் உடல்பருமன்,உடல் உழைப்பு இல்லாதது முக்கியமான காரணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *