
#paleoafterbypasssurgery
பேலியோ உணவு- ??
நேற்று ஒருவர் என்னுடைய கிளினிக்கு வந்திருந்தார். அவர் கடந்த ஆறு மாதமாக கீட்டோ உணவு முறையை சாப்பிடு வதாக கூறினார்.அவருடைய ரத்த பரிசோதனை முடிவுகளை பார்க்கும் பொழுது மூன்று மாத சர்க்கரை அளவுகள், ரத்த கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாக இருந்தது.
அவர் 2014 ஆம் ஆண்டில் பைபாஸ் சர்ஜரி செய்ததாக கூறினார். அவருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததால் இரண்டு வேளையும் இன்சுலின் போட சொல்லி மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். மேலும் திரும்பவும் மாரடைப்பு வராமல் இருப்பதற்காக ரத்தம் உறையாமல் இருக்க கூடிய மாத்திரைகள், கொலஸ்ட்ரால் மாத்திரைகள் கொடுத்துள்ளார்கள். இவர் ஆங்கில கேட்ட குழுமங்கள் ஃபேஸ்புக் மூலம் தானாகவே உணவு முறையை ஆரம்பித்து விட்டு இன்சுலின், இருதய மாத்திரைகள் ,கொலஸ்ட்ரால் மாத்திரைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டார். இவருடைய சர்க்கரை அளவுகள் அதிகமாக உள்ளது ,கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது.
இதனால் ஈரோட்டில் உள்ள டாக்டர் அருண் குமார் அவர்களின் ஃபேஸ்புக் வீடியோக்கள் பார்த்துவிட்டு அவரை அணுகி ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர் உங்கள் வீட்டுக்கு அருகில் பொள்ளாச்சியில் டாக்டர் ராஜா இருக்கிறார் அவரை சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார்.
இவர் நன்றாகப் படித்தவர், இருதய மருத்துவர்கள் சர்க்கரை நோய் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் அனைத்து மருந்தையும் நிறுத்திவிட்டார். மற்றும் வெஜிடேரியன், வெஜிடேரியன் உணவில் எப்படி கீட்டோ உங்களால் சாப்பிட முடிகிறது உங்கள் உணவு முறையை கூறுங்கள் என்று கேட்டேன்.
அவர் இரண்டு முட்டை, பன்னீர் மற்றும் கீரை சூப், பட்டர் டீ மற்றும் எடுத்துக் கொள்வதாக கூறினார். அவருக்கு தேவையான புரதம் மற்றும் கொழுப்பு சத்து அவருடைய எடுத்துக்கொண்டிருந்த உணவுகளில் கிடைக்கவில்லை, சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இல்லை.
அவர் டைப் 2 வில் இருந்து டைப் 1 சர்க்கரை நோயாளியாக மாறி இருக்கிறார். முறையாக இன்சுலின் எடுத்துக் கொண்டு மாத்திரை எடுத்துக் கொண்டு இந்த வழியாக உணவை அவர் எடுத்துக் கொண்டிருந்தபோது இரண்டு நேரமும் 5 யூனிட் இன்சுலின் தான் அவருக்குத் தேவைப்பட்டது. அவர் அனைத்து மருந்தையும் நிறுத்திவிட்டு முயற்சி செய்ததால் அவர் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை.
ஆனால் பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள், ஸ்டென்ட் வைத்தவர்கள் உங்கள் இருதய மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை நிறுத்தாமல் உடற்பயிற்சி உணவு முறை மாற்றம் செய்து தொடர்ச்சியாக பிரதமர் எழுதிய மருத்துவரை பார்த்து பரிசோதனை மேற்கொண்டு அவர்களாக மாத்திரைகளை குறைத்தால் மாத்திரைகளை குறைக்க வேண்டும்.
ஒரு முறை மாரடைப்பு வந்தால் மீண்டும் 20 சதவிகிதம் மீண்டும் மாரடைப்பு வரும் வாய்ப்பு உள்ளது. அதனால் சர்க்கரை, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மீண்டும் நம்முடைய உள்ளுறுப்புகளுக்கு பாதிப்பு வருவதை தடுக்க முடியும்.
அவருக்கு முறையாக அவர் செய்யும் உடற்பயிற்சிக்கு தேவையான அளவு புரதம், கொழுப்பு மற்றும் மாவு சத்து அளவுகளை கூறி அவர் நிறுத்திய இருதய மாத்திரைகள் கொழுப்பு சத்து மாத்திரைகள் மற்றும் இன்சுலின் திரும்பவும் ஆரம்பித்தேன்.ஒரு மாதம் தினமும் சர்க்கரை அளவுகளை குறித்துக் கொண்டு அதற்கு தகுந்தார்போல் இன்சுலினை குறைத்துக் கொண்டு வாருங்கள் என்று கூறி உள்ளேன். மாதத்திற்கு பிறகு அவருடைய ரத்த கொழுப்பு அளவுகள் பரிசோதித்துவிட்டு மீண்டும் இருதய மருத்துவரிடம் அவருடைய இருதய பரிசோதனை செய்ய அறிவுரை கூறி உள்ளேன்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் பேலியோ உணவை தொடர வேண்டும், பேலியோ பற்றி தெரிந்த மருத்துவர்களின் உதவியோடு தொடர்வது நல்லது.
மருத்துவர்.ராஜா ஏகாம்பரம்,
பொள்ளாச்சி