
டாக்டர் .ராஜா ஏகம்பரம்,
குழந்தைகள் நல மருத்துவர்,
மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி.
கொரோனா தொற்று உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சிறுநீரக நோய் உள்ளவர்கள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், கேன்சரால் பாதிக்கப்பட்ட வர்கள் என்று பலரை அதிகமாக தாக்குகிறது.
சர்க்கரை நோயை உணவின் மூலமும், உடற்பயிற்சி மூலமும், மருந்துகள் மூலமும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் போது நம்மை நோய் அதிகமாக தாக்காது.
இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள குறிப்புகள்:
வீண் பயம் வேண்டாம் :
1.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உங்கள் மருத்துவர் கொடுத்துள்ள மாத்திரைகள் அல்லது இன்சுலின் ஊசிகளை தவறாமல் தினமும் எடுத்துக் கொள்ளவும்.
2.தவறாமல் வாரம் ஒருமுறை சர்க்கரை அளவுகளை வீட்டுக்கு அருகாமையில் உள்ள லேபில் அல்லது மருத்துவமனையில் பரிசோதித்து கொள்ளவும்.
3. சர்க்கரை அளவுகள் சாப்பிடாமல் 120க்கு கீழ் அல்லது சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு 160 கீழ் வைத்து கொள்வது நல்லது.
4. கால் மற்றும் பாதங்களை முறையாக சுத்தப் படுத்தி காயங்கள் ஏற்படாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. புரத சத்துள்ள பயறு வகைகள் ,முட்டை,மீன் இறைச்சி,பால் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. வைட்டமின்-டி கிடைப்பதற்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை உங்கள் தோலை நேரடியாக வெயிலில் படும்படி சிறிது நேரம் (15 நிமிடங்கள்) காட்ட வேண்டும்.
7. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மனநலம் காக்க உடற்பயிற்சி, தியானம் ,யோகா, மூச்சுப்பயிற்சி முதலியவற்றை செய்யலாம்.
8. ஆரோக்கியமான உணவுகளான நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும். விட்டமின் டி சத்து அதிகம் உள்ள உணவுகளான மீன் , முட்டை, பாலாடைக்கட்டி , காளான்கள் , வைட்டமின் செறிவூட்டப்பட்ட பால் வகைகள் உண்ணலாம்.
9. உணவில் தவறாமல் மஞ்சள் ,பூண்டு ,மிளகு, இஞ்சி,சீரகம் மற்றும் வெந்தயம் போன்றவற்றை நோய் எதிர்ப்பு சக்திக்காக சேர்த்துக் கொள்ளலாம்.
10. வைட்டமின் சி நிறைந்த உணவுகளான கொய்யா , நெல்லிக்காய், தக்காளி, எலுமிச்சை பழம் தினமும் சேர்த்துக்கொள்வது நல்லது.
11.zinc அதிகம் உள்ள உணவு வகைகளான பருப்பு வகைகள், பால் சார்ந்த உணவு வகைகள், முட்டை,பயறு வகைகள் சேர்த்துக் கொள்ளலாம்.
12. சித்த மருத்துவ முறையான நில வேம்பு, கபசுரக் குடிநீர் எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
#கொரோனாவருமுன்காப்போம்.
அரசு சொல்லி இருக்கும் அனைத்தும் பேலியோ உணவு முறையில் உள்ளது.