preloader

கொரோனா அரக்கனை வெல்ல பேலியோ உணவு முறை.

  • Home
  • -
  • Paleo
  • -
  • கொரோனா அரக்கனை வெல்ல பேலியோ உணவு முறை.
 கொரோனா அரக்கனை வெல்ல பேலியோ உணவு முறை.

 

மரு.ராஜா ஏகாம்பரம்,
குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர்,
மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் கடந்த நான்கு மாதத்தில் இதுவரை 200க்கு மேற்பட்ட நாடுகளில் 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டரை லட்சம் பேர் இதுவரை இறந்துள்ளனர். 50,000 பேர் மோசமான நிலையில் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 1400 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

இந்த நோய் இன்னும் எவ்வளவு பேரை தாக்கும்? எவ்வளவு நாள் இருக்கும் ? என்று யாருக்குமே தெரியவில்லை.

இந்த நோய் பெரும்பாலும் உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள், இருதய நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம்,ஆஸ்துமா கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்களையே அதிகம் தாக்குகிறது.மரணமும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக வருகிறது. தற்போது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளையும் அதிகமாக தாக்குகிறது . உடல்நிலை நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு இந்த கொரோனா அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.

உலகத்தின் சர்க்கரை நோயின் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தமிழக அரசு செய்த ஒரு ஆய்வில் 50 சதவிகிதத்திற்கு மேல் உடல் பருமன், சர்க்கரை நோய் ,உயர் ரத்த அழுத்தம் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தமிழ் நாட்டில் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியர்கள் சாப்பிடும் அதிக மாவுசத்து உணவுகளான அரிசி ,கோதுமை உணவுகள், துரித உணவுகள், குளிர்பானங்கள்,உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது ,புகை பிடித்தல்,மது அருந்துதல் என்று பல காரணங்கள் உள்ளது. இந்தியர்கள் தங்களுடைய உணவில் உடலுக்கு தேவையான நல்ல புரதங்கள் மற்றும் கொழுப்பு சத்து உள்ள உணவுகளை தேவையான அளவுகளில் சாப்பிடுவது இல்லை.

குறை மாவுசத்து, தேவையான புரதம், உடலுக்கு கெடுதல் செய்யாத நல்ல கொழுப்பு உணவுகள் அடங்கிய “பேலியோ உணவு” முறையை கடைபிடித்து வருபவர்களுக்கு உடல் எடை குறைகிறது, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடலிலுள்ள அதிக ரத்தக் கொழுப்பு அளவுகள் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இவர்கள் இதற்கு முன்னதாக சர்க்கரை நோய்க்கு உடல் பருமனுக்கு உயர் ரத்த அழுத்தத்திற்கு எடுத்துக்கொண்டிருந்த மருந்து மாத்திரைகளை இந்த உணவு முறையின் போது குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முடிகிறது. ஆஸ்துமா போன்ற அலர்ஜியால் வரக்கூடிய நோய்கள் பேலியோ உணவு முறையில் தானியங்களை தவிர்க்கும் போது கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இந்த உணவினால் இவர்களுக்கு உள்ள நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இவர்களால் நோயில்லாமல் இருப்பவர்கள் போல நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது.

தற்போதுள்ள இளைய தலைமுறையினர் வேலை, வேலை என்று தங்களுடைய உடல் நலத்தை கவனிக்காமல் இரவு பகலாக பணம்மட்டுமே குறிக்கோளாக உழைப்பதால்- சிறிய வயதிலேயே அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது.வேலை பளுவின் காரணமாக உயர் ரத்த அழுத்தம், சக்கரை நோய் ,குழந்தையின்மை சிறிய வயதிலேயே அதிகமாக ஏற்படுகிறது.

பேலியோ உணவை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள் புகைப்பழக்கம் மற்றும் மது பழக்கங்களை விட்டுவிடுவதால் அவர்களுடைய நுரையிரல் மற்றும் கல்லீரலுக்கு ஏற்படும் ஆபத்துகளும் தவிர்க்கப்படுகிறது.

இந்த உணவு முறையில் அதிகமாக எடுத்துக்கொள்ளும் எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் மூலம் வைட்டமின் சி கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும் கீரை, முட்டை மற்றும் மாமிசக் உணவுகளால் ரத்தத்தில் இரும்பு சத்து கூடும்.

சைவ முறையில் பேலியோ உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கும் அவர்கள் சாப்பிடும் பனீர், பிரக்கோலி, சீஸ், பாதம் ,வால்நட்,அவகோடா,பட்டர் ,நெய், தேங்காய், தேங்காய் எண்ணெய் மூலம் நல்ல தரமான புரதச்சத்தும், கொழுப்பு சத்தும் கிடைக்கிறது.

முறையாக பேலியோ உணவு முறையை கடைபிடிப்பவர்களுக்கு நோய்கள் ஏற்பட்டாலும் விரைவாக அவர்கள் குணமடைய தங்கள் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி உதவுகின்றன.

தேவையான புரதச்சத்து இந்த உணவின் மூலம் கிடைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

“ஆரோக்கியமான உடம்பு நோய் வந்தாலும் எதிர்த்து போராடும்”

வாழ்க நலமுடன் .

#விழித்திரு
#விலகியிரு
#தனித்திரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *